Subscribe
Want to keep up to date with all our latest news and information? Enter your email below to be added to our mailling list.
சென்னை மீனம்பாக்கத்தில் பிரமாண்ட விமான நிலையம் இயங்கி வருகிறது. உள்ளூர் மற்றும் சர்வதேச விமான நிலையம் என 2 சேவைக்கான நிலையங்களும் அங்கு இயங்குகின்றன. இந்திய அளவில் சிறந்த விமான நிலையங்களின் பட்டியலின் சென்னை விமான நிலையம் முன்னிலை வகிக்கிறது. இந்த விமான நிலையத்தை ஜி.எஸ்.டி. சாலை, புறநகர் ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் வசதி ஆகிய 3 வழிகள் மூலம் அடையலாம். இந்த மூன்று வழிகளுமே மீனம்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு மிக அருகில் உள்ளன. இதில் விரைவாகவும், தடங்கல் இன்றியும் விமான நிலையத்தை அடைய மெட்ரோ ரெயிலை ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த விமான நிலையத்துக்கு நாளொன்றுக்கு சுமார் 65 ஆயிரம் பயணிகள் வந்து செல்வதால் நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதை தவிர்ப்பதற்காக சென்னைக்கு அருகே 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான முடிவை தமிழக அரசு எடுத்தது. அதன்படி முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட ‘தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023’-ல், ஸ்ரீபெரும்புதூரில் பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த கோரிக்கையை மத்திய அரசுக்கும் தமிழக அரசு தெரிவித்து வந்தது. Publisher Name: Daily thanthi